Friday, February 18, 2011

பயங்கரக் கதை

மெஷோகிஸ்ட் (Mesochist) என்பது தன்னைத் தானே வருத்திக் கொண்டு இன்பம் காண்போருடைய வியாதியின் பெயர்.

இந்த வியாதிக்கு இந்தப் பெயர் வரக் காரணம் Count Leepold von socher-masoch என்னும் ஒரு எழுத்தாளர் என்பதுதான் ஆச்சர்யமான விஷயம்.

அதைவிட ஆச்சர்யம் அவருக்கு இந்த வியாதி வருவதற்கான காரணம், சின்ன வயதில் அவர் அம்மா சொன்ன கதைகள் என்பதுதான்.

ஆஸ்ட்ரிய நாட்டு நிலப் பிரபுவான அவர் தனது தாயிடம் தாய்ப்பால்கூடக் குடிக்காமல், வாடகைத் தாயிடம் குடித்து வளர்ந்தவர் என்பதும் ஒரு செய்தி.

சின்ன வயதில் அவருடைய அம்மா சொன்ன பயங்கரக் கதைகளைக் கேட்டு வளர்ந்த அவர், மனச்சிதைவுக்கு ஆட்பட்டு மனம், உடல் என இருபக்கமும் தன்னைத்தானே துன்புறுத்திக் கொண்டு, அதில் இன்பம் காண ஆரம்பித்தார்.

அதனாலேயே, தன்னைதானே வருத்திக் கொள்ளும் வியாதிக்கு மெஷோகிஸம் என்று பெயர் வந்தது.

இது சைக்கோ, சாடிஸ்ட் எனப்படும் அடுத்தவரை துன்புறுத்தி இன்பம் காணும் வியாதிக்கு நேரெதிராகும்.

ஒருமுறை மெஷோகிஸ்ட்டும் சாடிஸ்ட்டும் சந்தித்தபோது, மெஷோகிஸ்ட் சாடிஸ்ட்டைப் பார்த்து,"என்னை அடி..!" என்று சொன்னாராம்.

அதற்கு அடுத்தவரை துன்புறுத்தி இன்பம் காணும் அந்த சாடிஸ்ட் சிரித்தபடி,"மாட்டேன்...!" என்றாராம்.
.
.
.

5 comments:

  1. \\ அடுத்தவரை துன்புறுத்தி இன்பம் காணும் அந்த சாடிஸ்ட் சிரித்தபடி,"மாட்டேன்...!" என்றாராம்\\

    பயங்கரம்...!

    ReplyDelete
  2. ஐயோ பயங்கரமா இருக்கு . ஹி ஹி

    ReplyDelete
  3. /அதற்கு அடுத்தவரை துன்புறுத்தி இன்பம் காணும் அந்த சாடிஸ்ட் சிரித்தபடி,"மாட்டேன்...!" என்றாராம்./

    :))

    hmm! Enna Oru Sadist Parunga!

    ReplyDelete