Wednesday, February 23, 2011

டார்வின் தியரி தப்பு

மங்கி ஃபால்ஸ்னு ஒரு இடம் இருக்கு... பொள்ளாச்சி பக்கத்துல.

தமிழில் குரங்கு அருவினு சொல்லுவாங்க.

கூட்டம் கூட்டமாய் குரங்குக இருக்கும் அங்க.

ரொம்ப நாளைக்கு முன்னாடி, குரங்குகள்ல பெருசுகள் கூடின இடத்துல ஒரு முக்கியமான விவாதம் சபைக்கு வந்தது.

அப்ப ஒரு குரங்கு அருவியில் குளித்துக் கொண்டிருந்த மனுஷங்களைப் பார்த்துட்டுக் இன்னொரு குரங்குகிட்ட கேட்டுச்சு.

"நம்மகிட்ட இருந்துதான் இந்த மனுஷப் பசங்க தோன்றுனாய்ங்கனு டார்வின் சொன்னதா சொல்றானுவ. ஆனா, எவனும் நம்ம மாதிரி அழகா இல்லியே..!".

அதைக் கேட்டதும் கோபமான ஒரு வயசாளிக் குரங்கு சொன்னது.

"சரி, டார்வின் அப்படிச் சொன்னாம்பா ஓகே.
ஆனா, குரங்கான நாம யாரும் மனைவியத் தள்ளி வைப்பது இல்லியே.
மனைவி மக்களை திக்கில்லாமல் தவிக்க விட்டு ஓடுறதில்லையே.
கள்ளக்காதல் கிடையாது.
கடத்தல் கிடையாது.
புகை பிடிப்பது, சூதாடுவது, குடிப்பது, கூத்தாடுவது கிடையாது.
எந்தக் குரங்கும் எண்பதாவது வயசுல நாலாவது கல்யாணம் பண்ணிக்கறது கிடையாது.
எந்த ஒரு குரங்கும் இன்னொரு குரங்கை துப்பாக்கியாலோ அணுகுண்டாலோ தாக்கி அழிச்சுக்கிறது கிடையாது.
அப்புறம் எப்படி மனுசனுக நம்மகிட்ட இருந்து தோன்றுனானு சொல்றனுகன்னு தெரியலையே.
எனக்கென்னவோ டார்வின் சொன்னது தப்புனுதான் தோணுது...!".

குரங்குக பேசிக்கிட்டு இருக்கறது எதுவும் தெரியாம, குரங்கருவில இன்னும் குளிச்சுட்டுத்தான் இருக்கானுக மனுசப் பயலுக.
.
.

6 comments:

  1. "நம்மகிட்ட இருந்துதான் இந்த மனுஷப் பசங்க தோன்றுனாய்ங்கனு டார்வின் சொன்னதா சொல்றானுவ. ஆனா, எவனும் நம்ம மாதிரி அழகா இல்லியே..!".//

    அது சரிதான் சிலரை பார்க்கும்போது எனக்கும் அப்படி தோன்றும் !!!

    ReplyDelete
  2. Yesterday, I went to Monkey falls... :)))

    ReplyDelete
  3. நம்ம மாதிரி அழகா இல்லியே..!".//
    குரங்கின் நினைவுகள் புத்திசாலித்தனமானவை மனிதனை விட...

    ReplyDelete